English/ अंग्रेज़ी |
Definition/ पारिभाषा |
Feedback/प्रतिपुष्टि |
Gesinnung (= political consciousness) | அரசியல் விழிப்புணர்வு. அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான சாதாரண குடிமக்களின் அறிவு, ஆர்வம் மற்றும் செயல்பாடுகள். | प्रतिपुष्टि |
political agent | அரசியல் முகவர். சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவில் உள்ள உள்நாட்டு ஆட்சிகள், சுதேச அரசுகள் போன்றவற்றில் இங்கிலாந்து அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி. | प्रतिपुष्टि |
political asylum | ஒரு நாட்டில் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதால், துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒருவர் பிற நாடுகளுக்கு தப்பி செல்வது மற்றும் அங்கு அரசாங்கத்தால் அவருக்கு அடைக்கலம் அளிப்பது. சில நேரங்களில் அத்தகைய நபர் தனது சொந்த நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைய முடியும். எனினும், சர்வதேச சட்டங்கள் பொதுவாக தூதரகங்களில் அடைக்கலம் பெறுவதற்கான உரிமையை அங்கீகரிப்பதில்லை. | प्रतिपुष्टि |
political behaviour | அரசியல் நடக்கைகள். அரசியல் அமைப்பின் பல்வேறு உறுப்புகளின் நடக்கைகள், அரசியல் அமைப்பு தொடர்பான மக்களின் செயல்பாடுகள். தேர்தல்களில் வாக்களிப்பது அல்லது அரசியல்வாதிகளால் முடிவு செய்யப்படுவது போன்றவை அரசியல் நடக்கைகள் எனப்படுகின்றன. | प्रतिपुष्टि |
political change | அரசியல் மாற்றம். அரசியல் மாற்றம என்பது ஒரு சமூகத்தில் புதிய ஆட்சியைப் ஏற்படுத்துவது. அவற்றை நடைமுறைப்படுத்துவது இந்த அரசியல் மாற்றம் வழக்கமான அரசியலமைப்பு வழி அல்லாத நடவடிக்கையால் நிகழ்ந்தால் அது அரசியல் புரட்சி என்றழைக்கப்படும். | प्रतिपुष्टि |
political communication | அரசியல் தகவல் தொடர்பு. அரசியல் நடைமுறை தொடர்புடைய செய்திகளை ஒளிபரப்புதல் அல்லது தகவல்களை வெளியிடுதல். தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள அரசியல் தகவல்களைத் தருகின்றன. தவிர, ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைகள், அரசியல் படுகொலைகள் போன்றவையும் அரசியல் தகவல் தொடர்பு சார்ந்தவையே. | प्रतिपुष्टि |
political crime | அரசியல் ரீதியான குற்றங்கள். அரசை பதவியிலிருந்து அகற்றுவதற்காகவோ அல்லது அதன் செயல்பாடுகள் அல்லது நிர்வாகச் செயல்பாடுகளைத் தடுப்பதற்காகவோ அல்லது அரசியல் சிந்தனைகள் காரணமாகவோ மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள், அரசியல் ரீதியான குற்றங்களாகும். | प्रतिपुष्टि |
political culture | அரசியல் பண்பாடு. அரசியல் அமைப்பு மற்றும் அதன் அமைப்புகள் மீதான மக்களின் விருப்பம் மற்றும் எதிர்வினைகள், அவர்களின் நம்பிக்கை, நம்பிக்கை மற்றும் பங்களிப்பு, சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள். | प्रतिपुष्टि |
political development | அரசியல் மேம்பாடு. மேற்கத்திய சிந்தனையாளர்களின கருத்துப்படி, அரசியல் மேம்பாடு என்பது வளரும் நாடுகளில் அரசியலமைப்பானது நவீன தாராளவாத ஜனநாயக திசையில் தொடர்ந்து நகர்வதைக் குறிக்கிறது. புகழ்பெற்ற அமெரிக்க அறிஞர் பை, அரசியல் வளர்ச்சிக்கு சமத்துவம், திறன் மற்றும் வேறுபடுத்தல் என்ற மூன்று முக்கிய அம்சங்களை விளக்கினார். | प्रतिपुष्टि |
political encirclement ( = capitalistic encirclement) | அரசியல் முற்றுகைகள் (முதலாளித்துவ முற்றுகைகள). உலக நாடுகளின்மீது குறிப்பிட்ட நாடுகள் செலுத்தும் செல்வாக்கு, முன்னேற்றம் போன்றவற்றை குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்காக ஒன்றுசேரும் நாடுகளின் எதிர்ப்பு அரசியல். அண்டை நாடுகளுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவது, செல்வாக்குச் செலுத்தும் நண்பர்களை பிரிப்பது, அந்நாடுகளின் அனைத்து வகையான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் சர்வதேச அரங்குகளில் அவற்றை தாழ்த்துவது போன்ற முயற்சிகள் இதில் அடங்கும். முதலாளித்துவ நாடுகள் கம்யூனிச நாடுகளின் முன்னேற்றத்தையும் செல்வாக்கையும் தடுப்பதற்காகவே அரசியல் முற்றுகையைத் தொடங்கின. | प्रतिपुष्टि |
political equality | அரசியல் சமத்துவம். அரசியல் அமைப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை, பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமை போன்றவை சம உரிமைகளாக வழங்கப்பட வேண்டும். | प्रतिपुष्टि |
political executive | அரசியல் நிர்வாகம். இது ஜனநாயக நடைமுறைகளைக் கொண்ட நாட்டின் மூன்று முக்கிய உறுப்புகளில் ஒன்று. அரசியல் நிர்வாகத்தில் பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியவை அடங்கும். அதிகார அமைப்பு என்பது நிரந்தர நிர்வாகம் என்று அழைக்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட காலத்திற்கு அமைச்சரவை செயல்படும். | प्रतिपुष्टि |
political freedom/liberty | அரசியல் சுதந்திரம். குடிமக்களுக்கு வாக்களித்தல் மற்றும் தேர்வு செய்தல் போன்ற நடைமுறைகளில் குடிமக்களுக்கு அளிக்கப்படும் அரசியல் சுதந்திரம். அரசியல் கட்சிகளை உருவாக்குதல், கூட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துதல், அவற்றில் பங்கேற்கும் உரிமை மற்றும் கருத்துக்களைப் பரப்புதல் ஆகியவையும் அரசியல் உரிமைகளில் அடங்கும். | प्रतिपुष्टि |
political independence | சுதந்திர அரசியல்; பிறரைச் சாரா அரசியல் சுதந்திரம். வெளி மற்றும் உள் விவகாரங்களில் சுதந்திரமாகத் தீர்மானம் எடுக்கும் நிலைபாட்டைக் குறிப்பது. வெளிநாட்டு அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இறையாண்மையையும் குறிக்கும். | प्रतिपुष्टि |
political modernization | அரசியல் நவீனமயமாக்கம். இது மேற்கத்திய அரசியல் கருத்தாகும். பாரம்பரியம், பழமைவாதம் அல்லது சர்வாதிகாரம் கொண்ட அரசியல் அமைப்பை நவீனத் தாராளவாத ஜனநாயக அமைப்பாக மாற்றுவது அரசியல் நவீனமயமாக்கல் ஆகும். | प्रतिपुष्टि |
political party | அரசியல் கட்சி. அரசியல் கட்சி என்பது பொது நலன் கருதி, தத்துவம், அமைப்பு, தலைமை மற்றும் குடிமக்களுக்காகத் திட்டங்களைக் கொண்ட குழு. அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை தேர்தலில் பங்கேற்று ஆட்சியைப் பெறுவது அல்லது அதன் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது ஆகும். | प्रतिपुष्टि |
political philosophy | அரசியல தத்துவம். அரசியல் கொள்கைகளின மீது பகுப்பாய்வு செய்து விளக்கத்தை வழங்கும் அரசியல் அறிவியல். | प्रतिपुष्टि |
political rights | அரசியல் உரிமைகள். அரசியல் நடைமுறைகளில் தனிநபர் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை வழங்குதே அரசியல் உரிமைகள் ஆகும். பொதுவாக நாட்டின் குடிமக்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. (வெளிநாட்டவர்களுக்கு அல்ல.) உதாரணமாக, வாக்குரிமை, தேர்தலில் நிற்பதற்கான உரிமை, பேரவைக் குழுக்களை அமைப்பதற்கான உரிமை, மாநாடுகளை நடத்துவதற்கான உரிமை போன்றவை அரசியல் உரிமைகளுள் சில. | प्रतिपुष्टि |
political science | அரசியல் அறிவியல். அரசு மற்றும் அரசாங்கங்களின் பல்வேறு அம்சங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்வது அரசியல் அறிவியல் ஆகும். நவீன காலத்தில் அரசியல் அமைப்பு மற்றும் பொதுக் கொள்கை ஆகியவற்றை ஆய்வு செய்யும் அறிவியலாகவும், மக்களுக்கும் அரசுக்கும் உள்ள உறவுகளைப் பற்றி ஆராயும் ஒரு துறையாக உள்ளது. மக்களின் உரிமைகளைப்பற்றிப் படிக்கும் ஒரு பாடமாகவும் கருதப்படுகிறது. அதிகாரத்திற்கான போட்டி என்பது தற்காலத்தில் அதன் ஆய்வில் முக்கிய இடம் பெறுகிறது. | प्रतिपुष्टि |
political socialization | அரசியல் சமூகமயமாக்கல். ஒரு நாட்டில் அரசியல் கருத்துக்கள், அரசியல் மனோபாவம், அரசியல் செயல்பாடுகள் போன்றவற்றைச் சமூக நிறுவனங்களான குடும்பம், கல்வி, ஊடகம் மற்றும் குழுக்கள் மூலம் செயல்படுத்தும் செயலாகும். | प्रतिपुष्टि |
political sociology | அரசியல் சமூகவியல். அரசியல் நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளை சமூகச் சூழலில் ஆய்வு செய்யும் அறிவியல் ஆகும். மேலும், அரசியல் செயல்பாடுகள், அவற்றின் தாக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்கிறது. அரசியல் சமூகவியல் என்பது சமூகத்திற்கும், அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்கிறது. | प्रतिपुष्टि |
political stability | அரசியல் நிலைத்தன்மை. ஒரு நாட்டின் எந்தவொரு சூழ்நிலையிலும் அரசு நிலைத்திருக்கும்தன்மை. அதாவது மீண்டும் ஆட்சி மாற்றம் இல்லாமல் இருப்பது. வேறு வார்த்தைகளில் சொன்னால், குறிப்பிட்ட காலம்வரை அரசு தொடர வேண்டும் என்பதே அரசியல் நிலைத்தன்மை எனப்படுகிறது. | प्रतिपुष्टि |
political system | அரசியல் அமைப்பு. ஒரு அரசியல் அமைப்பில் அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் முக்கியமானவை. இந்த நடைமுறையில் நான்கு முக்கிய அம்சங்கள் உள்ளன. அவை : (1) ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமானது. (2) அதிகாரப்பூர்வமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம். (3) முடிவுகளை செயல்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்குமான அதிகாரம். மற்றும் (4) இந்த உரிமையை சமுதாயத்திற்கு வழங்கும் அமைப்பே அரசியல் அமைப்பாகும். | प्रतिपुष्टि |
political theory | அரசியல் கோட்பாடு. மாநில அரசு, அரசு, இறையாண்மை, சட்டம் போன்றவற்றின் கொள்கைகளை ஆய்வு செய்யும் அரசியல் அறிவியலின் ஒரு பகுதியே இது. அது அரசியல் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்தல், சோதனை செய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. அரசின் செயல்பாடுகளைக் கோட்பாட்டு அடிப்படையில் ஆராய்கிறது. | प्रतिपुष्टि |
political thinker | அரசியல் சிந்தனையாளர். அரசியல் அமைப்பு அல்லது அரசியல் கோட்பாடுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து அடிப்படை சிந்தனை மற்றும் பகுப்பாய்வு செய்யும் அறிஞர்கள். | प्रतिपुष्टि |
political thought | அரசியல் சிந்தனை. அரசு மற்றும் ஆட்சி தொடர்பான பல்வேறு தத்துவஞானிகள் மற்றும் சிந்தனையாளர்களின் கருத்துக்கள், அவர்கள் முன்வைக்கும் கொள்கைகளின் தொகுப்புகள். | प्रतिपुष्टि |